பெய்ஜிங், 26 டிசம்பர் (பெர்னாமா) - இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் வணிக உறவுகளை வலுப்படுத்தும் பொருட்டு, சீனாவிலிருந்து வரும் சுற்றுப் பயணிகளுக்கான விசா விதிமுறைகளை ஜப்பான் எளிதாக்கவிருக்கின்றது.
சீனா, பெய்ஜிங்கில் நடைபெற்ற கலாச்சார பரிமாற்ற சந்திப்பின்போது ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் அத்திட்டத்தை முன்வைத்தார்.
இதற்கு முன்னர், கொவிட்-19 பெருந்தொற்றால் இடைநிறுத்தப்பட்டிருந்த ஜப்பானிய சுற்றுப் பயணிகளுக்கான குறுகிய கால விசா விலக்குகளை, இவ்வாண்டு நவம்பர் மாத இறுதியில் சீனா மீண்டும் தொடங்கியதை அடுத்து ஜப்பான் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
உயர்மட்ட இருதரப்பு பொருளாதார பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் வகையில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சீன உயர் ஆணையர் வாங் யி, ஜப்பான் செல்ல இணக்கம் தெரிவித்துள்ளதை இவாயா குறிப்பிட்டார்.
இதனிடையே, ஜப்பானிய கடல் உணவு இறக்குமதி மீதான சீனாவின் தடையை படிப்படியாக நீக்குவதற்கான திட்டங்கள், செப்டம்பரில் ஒப்புக்கொள்ளப்பட்டதை இரு உயர் ஆணையர்களும் உறுதிப்படுத்தினர்.
இந்நடவடிக்கை, ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியேற்றத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
மற்றுமொரு நிலவரத்தில், கிழக்கு ஆப்கானிஸ்தானின் பக்திக்கா மாகாணத்தில் பாகிஸ்தான் இராணுவ விமானம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஏறக்குறைய 46 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதில் பெரும்பான்மையாக குழந்தைகளும் பெண்களும் அடங்குவர்.
அத்தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று தமது தரப்பு எச்சரித்துள்ளதாக தலிபான் ஆப்கானிஸ்தான் இன்று, வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
பாகிஸ்தான் ராணுவ விமானம் நடத்திய இத்தாக்குதலினால் ஆப்கானிஸ்தானில் உள்ள நான்கு வெவ்வேறு இடங்களில் ஆறு பேர் காயமடைந்திருப்பதாக தலிபானின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதன் மூலம் எதிர்கொள்ளக்கூடிய விளைவுகள் குறித்து தூதரக அதிகாரியை ஆப்கானிஸ்தான் எச்சரித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)