உலகம்

ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் டிக்கெட் விற்பனை நிறுத்தம்

26/12/2024 05:02 PM

பெய்ஜிங், 26 டிசம்பர் (பெர்னாமா) - ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் இணையத் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதால் அதன் டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது.

மேலும் உள்நாடு மற்றும் அனைத்துலக விமான போக்குவரத்து சேவையில் ஏற்பட்ட தடங்கலுக்கு அந்நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 7.25 மணிக்கு ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

இணையத் தாக்குதல் குறித்து அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில், பிரச்சனைக்கான காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அந்நிறுவனம் முனைந்துள்ளது.

விமான சேவைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும், இந்த இணையத் தாக்குதல் குறித்த சம்பவங்களைப் புகாரளித்ததோடு கூடுதல் விவரங்கள் எதனையும் அந்த நிறுவனம் வழங்கவில்லை.

பின்னர், பிரச்சனை என்னவென்று அடையாளம் காணப்பட்டதாகவும் ஜப்பான் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

பரபரப்பான விமான போக்குவரத்தை கையாளும் ஜப்பான் ஏர்லைன்ஸில் ஏற்பட்டுள்ள இந்த இணைய தாக்குதல் உலக அளவில் பேசும் பொருளாகியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)