பொது

நான்கு மாநிலங்களில் விடுக்கப்பட்ட தொடர் மழை எச்சரிக்கை நிறைவுற்றது

05/01/2025 04:25 PM

கோலாலம்பூர், 05 ஜனவரி (பெர்னாமா) --கிளாந்தான், திரெங்கானு, பகாங் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களுக்கு கடந்த ஜனவரி முதலாம் தேதி விடுக்கப்பட்ட தொடர் மழை எச்சரிக்கை தற்போது மீட்டுக்கொள்ளப்பட்டது.

வானிலை நிலவரம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, வானிலை குறித்த ஆய்வின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் தொடர் மழை பெய்வதற்கான சாத்தியம் இல்லை என்று, மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட் மலேசியா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

இதனிடையே, அண்மைய வானிலை நிலவரங்கள் குறித்த தகவல்களை, மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம், சமூக ஊடகங்கள் மற்றும் myCuaca செயலி மூலமாக, பொதுமக்கள் உடனுடக்குடன் பெற்றுக் கொள்ளலாம்.

இது குறித்த மேல் விவரங்களுக்கு 1-300-22-1638 என்ற எண்ணில் மெட்மலேசியாவை தொடர்பு கொள்ளலாம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)