கோலாலம்பூர், 07 ஜனவரி (பெர்னாமா) - மோசடி மற்றும் சூதாட்டம் தொடர்பான இணைய உள்ளடக்கத்தை அகற்ற கோரி மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி 4,699 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.
இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 1 தொடங்கி இன்று செவ்வாய்கிழமை வரை பதிவு செய்யப்பட்டதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
"ஜனவரி 1 முதல் இன்று வரை மொத்தம் 4,699 உள்ளடக்கங்களை நீக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதில் 72 விழுக்காடு இணைய சூதாட்டச் பிரச்சனைகள் தொடர்புடையது. 14 விழுக்காடு மோசடி சம்பவங்கள் சம்பந்தப்பட்டவை. இவை இரண்டும் 86 விழுகாடு, உள்ளடக்கத்தை நீக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன, " என்றார் அவர்.
கோலாலம்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2025ஆம் ஆண்டு அனைத்துலக ஒழுங்குமுறை மாநாட்டின் சந்திப்பின் போது ஃபஹ்மி ஃபட்சில் அவ்வாறு கூறினார்.
மேலும், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போலி காணொளிகள், படங்கள் அல்லது குரல் மாறாட்டம் போன்றவற்றை உட்படுத்திய 'டீப்ஃபெக்' போன்ற மோசடி அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக ஃபஹ்மி கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)