சியோல், 05 ஜனவரி (பெர்னாமா) -- தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் யோலை கைது செய்வதில் அந்நாட்டின் அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றன.
யூன் சுக் யோல் வீட்டு வளாகத்தில் அவரின் ஆதரவாளர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு கருதி கைது நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை சியோலில் பெய்த பனி மழையையும் பொருட்படுத்தாமல் யூன் சுக் யோலின் ஆதரவாளர்கள் அவரின் வீட்டு வளாகத்தில் கூடினர்.
யூன் சுக் யோலைக் கைது செய்யும் நடவடிக்கையைக் கண்டித்து ஒன்று கூடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று சியோல் நகரில் உள்ள எட்டு வழி சாலையில் மேற்கொள்ளப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தினால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கைது ஆணைக்கு இணங்குமாறு யூன் சுக் யோலின் பாதுகாப்பு சேவைக்குத் தற்காலிக அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிலின்கென் தென் கொரியா செல்லவுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)