பொது

துப்பாக்கி; தோட்டாக்களை வைத்திருந்த வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டது

06/01/2025 06:08 PM

கோலாலம்பூர், 06 ஜனவரி (பெர்னாமா) - கோலாலம்பூரில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் கடந்த மார்ச் மாதம் 200 துப்பாக்கி தோட்டாக்களையும் ஆறு துப்பாக்கிகளையும் கொண்டிருந்த இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் இஸ்ரேலியப் பிரஜை அவிட்டன் ஷாலோமின் வழக்கு விசாரணை, நாளை ஒத்திவைக்கப்பட்டது.

இப்ரூ மொழிப்பெயர்ப்பாளர் இல்லாத காரணத்தில் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் அவ்வழக்கை ஒத்தி வைத்தது.

மொழிப்பெயர்ப்பாளரின் தேவை குறித்து, 39 வயதான அவிட்டனை பிரதிநிதித்த வழக்கறிஞர் டத்தோ நரண் சிங் விண்ணப்பம் செய்ததைத் தொடர்ந்து நீதிபதி நொரினா சைனோல் அபிடின் அம்முடிவைச் செய்தார்.

குற்றஞ்சாட்டப்பட்ட சாட்சியின் வாக்குமூலத்தை மொழிபெயர்ப்பதற்கு இப்ரூ மொழிபெயர்ப்பாளரைப் பெற நீதிமன்றம் முயற்சி செய்யும் நிலையில் விசாரணைக்கான இறுதி தேதியை இன்னும் நிர்ணயிக்கவில்லை என்று நீதிபதி நொரினா விவரித்தார்.

அதன் அடிப்படையில் வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இப்ரூ மொழிப்பெயர்ப்பாளர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால் எளிய ஆங்கில மொழியைப் பயன்படுத்தி நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் விளக்கத்தை வழங்குவார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)