உலகம்

ஹைத்தியில் துப்பாக்கிச் சூடு; மூவர் பலி

25/12/2024 05:33 PM

போர்ட்-ஓ-பிரின்ஸ், 25 டிசம்பர் (பெர்னாமா) - ஹைத்தியில் அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஆடவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர்.

அந்நாட்டில் புதுப்பிக்கப்பட்ட பெரிய பொது மருத்துவமையின் திறப்பு விழா தொடர்பாக அந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

இரு நிருபர்கள் உட்பட ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

தலைநகர் போர்ட்-ஓ-பிரின்சை, ஆயுதமேந்திய கும்பல்கள் கிட்டத்தட்ட முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

தங்களின் பலத்தை அரசாங்கத்திற்கு நிரூபிக்க ஆயுதமேந்திய கும்பல்கள் மருத்துவமனைகளைக் குறிவைத்து வருகின்றன.

இதனால் அந்நாட்டில் பல மருத்துவமனைகளை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மற்றொரு நிலவரத்தில், ஹைத்தியின் வடப் பகுதியில் உள்ள போர்ட்-டி-பைக்ஸ் எனும் நகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது எழுவர் உயிரிழந்திருப்பதாக போலீஸ் தெரிவித்தது.

சுமார் 500 வீடுகள் சேதமுற்ற நிலையில் 11,000 கட்டிடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

அப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் மிக மோசமான வெள்ளமாக இது கருதப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்க மீட்புக் குழுக்கள் அனுப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)