பொது

நஜிப்பின் வீட்டுக் காவல் விவகாரம்; மன்னிப்பு வாரியத்திடமிருந்து சிறைத்துறை உத்தரவைப் பெறவில்லை

06/01/2025 06:36 PM

புத்ராஜெயா, 06 ஜனவரி (பெர்னாமா) - முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக், தமது எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டில் அனுபவிக்குமாறு கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயா ஆகிய கூட்டரசுப் பிரதேசங்களின் மன்னிப்பு வாரியத்திடமிருந்து சிறைத்துறை இதுவரை எந்த உத்தரவையும் பெறவில்லை.

2024ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி முடிவு செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட வாரியத்தின் கூட்ட முடிவை மேற்கொள்வதற்கான கூட்ட விவரங்கள் மற்றும் உத்தரவை மட்டுமே சிறை துறை கடந்தாண்டில் பிப்ரவரி 2ஆம் தேதி பெற்றதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

16ஆவது மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷா கைழுத்திட்ட மற்றும் கூட்டர பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தபா பார்வையிட்ட உத்தரவில் டத்தோ ஶ்ரீ நஜிப்பின் சிறை தண்டனைக் காலத்தை 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி வரையும் அபாரதத் தொகையை 5 கோடியாகவும் குறைக்குமாறு மட்டுமே சிறைத் துறைக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் குறிப்பிட்டார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

வீட்டுக் காவல் குறித்து எந்தவொரு உத்தரவோ அல்லது தகவலோ தங்கள் தரப்பு பெற்ற மன்னிப்பு வாரியக் கூட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)