சிட்னி, 07 ஜனவரி (பெர்னாமா) - டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலிய ஆட்டக்காரர் நிக் கிர்கியோஸ் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரச்சனைக்குரிய ஆட்டக்காரரான அவரை ஆஸ்திரேலிய அணி இம்முறை டேவிஸ் கிண்ண போட்டி பட்டியலில் இணைத்துக் கொண்டுள்ளது.
2022-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் இரட்டையர் பட்டத்தை வென்ற 29 வயதான நிக் கிரிகியோஸ் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கும் அமெரிக்க பொது டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கும் முன்னேறினார்.
ஆனால், முழங்காலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் 2023இல் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளையும் தவறவிட்டார்.
கடந்தாண்டு ஜனவரி மாதம் முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அவர் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார்.
இதனால் கிராண்ட்ஸ்லாம் போட்டியிலிருந்து நிக் கிரிகியோஸ் ஓதுங்கியிருந்தார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியில் தனக்கு ஒரு மாற்றம் தேவை என்பதை அவர் கூறியுள்ளார்.
டேவிஸ் கிண்ண போட்டிக்காக, ஆஸ்திரேலியா களமிறக்கும் போட்டியாளர்களின் பட்டியலில், நிக் கிரிகியோஸ் தவிர, உலத் தரவரிசையில் எட்டாம் இடத்தில் உள்ள அலெக்ஸ் டி மினார், ஜோர்டான் தோம்சன் மற்றும் தனாசி கொக்கினாகிஸ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)