பொது

சிங்கப்பூர் பிரதமருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு நல்கப்பட்டது

07/01/2025 05:34 PM

புத்ராஜெயா, 07 ஜனவரி (பெர்னாமா) -  மலேசியாவிற்கு இரு நாள்கள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்குப் புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா புத்ரா வளாகத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு நல்கப்பட்டது.

காலை மணி 9.50 மணியளவில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவரை வரவேற்ற நிலையில் இரு நாடுகளின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இதில், துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோஃப் உட்பட அமைச்சரவை உறுப்பினர்களும் வருகைப் புரிந்திருந்தனர்.

மலேசியா - சிங்கப்பூர் தலைவர்களுடனான 11-வது சந்திப்பில் கலந்து கொள்வதற்காக, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)