பொது

மாடு ஒன்றை மோதி மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

08/01/2025 07:28 PM

தம்பின், 08 ஜனவரி (பெர்னாமா) -- நேற்று பின்னிரவு மணி 12.30 அளவில், நெகிரி செம்பிலான், ஜாலான் தம்பின் கெமாசில் ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், அச்சாலையில் திரிந்துக் கொண்டிருந்த மாடு ஒன்றை மோதி விபத்துக்குள்ளானதில் அந்நபர் உயிரிழந்தார்.

ஓர் உணவுக் கடையில் சமையல்காரராக பணிப்புரியும் அந்த இந்தோனேசிய ஆடவர் வேலை முடிந்து வீடு திரும்பும் போது, அச்சம்பவம் நிகழ்ந்ததாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அமிருடின் சரிமான் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த மாடு ஒன்றை மோதியதில், 26 வயதான அந்த ஆடவர் பலியானதாக அமிருடின் சரிமான், இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக தம்பின் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் 1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் செக்ஷன் 41 உட்பிரிவு (1)-இன் கீழ் விசாரிக்கப்படுகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)