பாந்த்ரா, 16 ஜனவரி (பெர்னாமா) -- இந்தியா, மும்பை, பாந்த்ராவில் உள்ள தமது இல்லத்தில் பாலிவுட் திரையுலக நடிகர் சயிஃப் அலி கான் கத்திக் குத்துக்கு ஆளாகி இருக்கின்றார்.
இன்று அதிகாலை மணி இரண்டு அளவில் அறிமுகமில்லாத மர்ம நபர் ஒருவர் அவர் வீடு புகுந்து இச்செயலை புரிந்ததாக நம்பப்படுகிறது.
கிட்டத்தட்ட அவரின் முதுகுத் தண்டு உட்பட மேலும் சில கத்திக் குத்துக் காயங்களுக்கு சயிஃப் அலி கான் ஆளாகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தற்போது அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகின்றார்.
சயிஃப் அலி கானின் உடல்நிலை சீராக இருந்தாலும் மருத்துவ பணியாளர்களால் அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
இதனிடையே, இச்சம்பத்தில் தொடர்புடைய சந்தேக நபரை மும்பை போலீஸ் தேடி வருகின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)