வாஷிங்டன், 16 ஜனவரி (பெர்னாமா) -- கடுமையான பாதுகாப்புடன் அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழாவுக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இரண்டாவது முறையாக டோனல்ட் டிரம்ப் அதிபராகப் பதவியேற்றும் விழாவில், 25,000 பாதுகாப்பு அதிகாரிகள் பணிக்கு அமர்த்தப்படவுள்ளனர்.
முன்னதாக அதிபர் தேர்தல் சில வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதற்கு முன்பு ஒருபோதும் கண்டிராத அளவுக்குக் கடுமையான பாதுகாப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஜனவரி 20-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பதவியேற்பு விழாவில் மிகவும் முக்கியமான நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வெள்ளை மாளிகை சுற்றி 48 கிலோ மீட்டர் தூரத்திற்கு வேலி போடப்பட்டுள்ளது.
ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம், வான் ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)