பொது

முதலாம் ஆண்டு மாணவர்களிடையே முதன்மை சுகாதாரப் பிரச்சனை பார்வைத் திறன் குறைபாடாகும்

16/01/2025 05:48 PM

புத்ராஜெயா, 16 ஜனவரி (பெர்னாமா) -- மலேசியாவில் குறிப்பாக புத்ராஜெயா கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள முதலாம் ஆண்டு மாணவர்களிடையே நிலவும் சுகாதாரப் பிரச்சனைகளில் முதன்மையானது பார்வைத் திறன் குறைபாடு ஆகும்.

புத்ராஜெயாவில் உள்ள முதலாம் ஆண்டு மாணவர்களில் 215 பேருக்குப் பார்வைத் திறன் குறைபாடு இருப்பதாக கூறிய சுகாதார அமைச்சர், டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மாட் 2023ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 239 பேராக இருந்ததாக சுட்டிக் காட்டினார்.

சுகாதார அமைச்சின் கீழ் உள்ள பள்ளி சுகாதாரக் குழுவின் சோதனையின் வழியாக மாணவர்களின் பார்வைத் திறன் பிரச்சனைகளை அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருதாக டாக்டர் சுல்கிஃப்ளி தெரிவித்தார்.

அதோடு, மேலும் ஐந்து விழுக்காட்டிற்கும் அதிகமான பார்வைத் திறன் குறைபாட்டை கண்டறிவதற்கான இலக்கையும் அமைச்சு நிர்ணயித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பார்வைத் திறன் குறைபாடு உள்ள மாணவர்களை ஆசிரியர்கள் முன் வரிசையில் அமரும்படி கூறினாலும் அந்நடவடிக்கை தற்காலிகமான ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)