தும்பாட், 20 ஜனவரி (பெர்னாமா) -- இணைய மோசடியை மேற்கொள்ள பெரும்பாலும் பயன்படுத்தப்படும் முக்கிய நான்கு இணைய தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
முகநூல், டிக் டாக், வட்ஸ்ஆப் மற்றும் தெலிகிராம் ஆகிய நான்கு தளங்களிலேயே கோடிக்கணக்கான ரிங்கிட் மதிப்பில் மோசடி சம்பவங்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறுகிறார்.
''சமூக ஊடகங்களில் சுமார் 13,14 வகையான மோசடிகள் நிகழ்வதாக வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. ஆனால் தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரடியாகவோ நிகழும் மோசடி சம்பவங்களும் உள்ளன, '' என்றார் அவர்.
இன்று கிளந்தான் தும்பாட்டில் நடைபெற்ற இஹ்ஸான் மடானி நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்த பின்னர், ஃபஹ்மி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
மோசடி சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு சமூக ஊடக தளங்களுக்கு உரிமம் வழங்குதல், விதிமுறைகளைக் கடுமையாக்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)