Ad Banner
Ad Banner
 விளையாட்டு

காயம் காரணமாக ஆஸ்திரேலிய பட்டத்தைத் தவறவிட்டார் டிராப்பர்

27/12/2025 07:32 PM

லண்டன், டிசம்பர் 27 (பெர்னாமா) -- ஜனவரியில் நடைபெறும் ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியில் களமிறங்கவில்லை என்று பிரிட்டனின் டென்னிஸ் ஆட்டக்காரர் ஜாக் டிராப்பர் அறிவித்துள்ளார்.

காயத்திலிருந்து தொடர்ந்து குணமடைந்து வருவதால் அடுத்த மாதம் இப்போட்டியில் தாம் விளையாடப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார்.

உலக தரவரிசையில் தற்போது 10வது இடத்தில் உள்ள ஜாக் டிராப்பர் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அமெரிக்க டென்னிஸ் போட்டியின் போது காயமடைந்தார்.

அப்போட்டியின் போது இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இடது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அதிலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

24 வயதான அவர் முன்பு உலக தரவரிசையில் நான்காவது இடத்தில் இருந்தார்.

பிப்ரவரியில் மீண்டும் களமிறங்க இலக்கு கொண்டிருக்கும் அவர் மார்ச் மாதம் தனது இந்தியன் வெல்ஸ் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள தயாராகி வருகிறார்.

ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டி ஜனவரி 18 ஆம் தேதி மெல்போர்னில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)