கோலாலம்பூர், 24 ஜனவரி (பெர்னாமா) -- மலேசியா ஆசியானிற்கு தலைமை ஏற்கும் காலம் முழுவதிலும், பாதுகாப்பையும் அமைதியையும் உறுதிசெய்வதற்கான பணிகள் மற்றும் தயார்நிலை நடவடிக்கைகளை கோலாலம்பூர் போலீஸ் மேற்கொள்கிறது.
ஏப்ரல், மே மற்றும் அக்டோபர் மாதங்களில், கோலாலம்பூரில் 186 கூட்டங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா தெரிவித்தார்.
''186 கூட்டங்கள். புத்ராஜெயாவில் 21. நிச்சயம், பொது மக்களின் பாதுகாப்பையும் அமைதியையும் உறுதிசெய்ய இந்த ஓராண்டில் பிடிஆர்எம்-இன் பங்களிப்பு முக்கியம்,'' என்றார் அவர்.
இன்று, கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற மாதாந்திரக் கூட்டத்திற்குப் பின்னர் டத்தோ ருஸ்டி அவ்வாறு கூறினார்.
போக்குவரத்து சுமூகமாக இருப்பதை உறுதிசெய்வது, பொது அமைதி உட்பட ஆசியான் நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டம் முழுவதிலும், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகளும் உறுப்பினர்களும் பணியில் ஈடுபடுவர் என்று அவர் குறிப்பிட்டார்.
மக்களிடையே குறிப்பாக வருகையாளர்கள் மற்றும் வெளிநாட்டு பேராளர்கள் பதற்றம் அடையாமல் இருக்க, கோலாலம்பூர் பாதுகாப்பான நிலையில் இருப்பதை உறுதிசெய்வது தங்கள் தரப்பின் கடமை என்று ருஸ்டி தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)