பொது

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு சிகரெட் கடத்தல் முறியடிப்பு

26/01/2025 07:12 PM

கோத்தா பாரு, 26 ஜனவரி (பெர்னாமா) --   கடந்த வியாழக்கிழமை, கிளந்தான், பாசிர் மாசில் ஒரு டன் லாரி ஒன்றின் வழி மேற்கொள்ளப்பட்ட சிகரெட்டுகள் கடத்தும் முயற்சியை முறியடிக்கும் வகையில் அரச மலேசிய சுங்கத் துறை, ஜேகேடிஎம் உறுப்பினர்கள் அதனை நோக்கி மூன்று முறை துப்பாக்கி சூடு நடத்தினர்.

இன்று காலை மணி 9.15-க்கு, கோத்தா பாரு ஜேகேடிஎம்மின் அமலாக்கப் பிரிவு நடவடிக்கை குழு, அந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக, கிளந்தான் மாநில ஜேகேடிஎம் இயக்குநர் வான் ஜமால் அப்துல் சலாம் வான் லொங் தெரிவித்தார்.

இன்று, கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள ஜேகேடிஎம் அமலாக்க அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வான் ஜமால் அவ்வாறு கூறினார்.

லாரியை சாலையோரத்தில் நிறுத்திய பின்னர் சந்தேக நபர் புதருக்குள் தப்பி ஓடியதாக சென்றதாக அவர் தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்களின் மதிப்பு, வரி உட்பட 10 லட்சத்து 53,000 ரிங்கிட்டாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)