கோலாலம்பூர், 24 ஜனவரி (பெர்னாமா) -- முகப்புகளில் ஏற்படும் நெரிசலைக் கையாள, நாடு முழுவதிலும் கடப்பிதழ்களை தயாரிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 அலுவலகங்களை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறப்பதற்கான முயற்சிகளை மலேசிய குடிநுழைவுத்துறை முன்னெடுத்துள்ளது.
நாளை தொடங்கி நிலைமைக் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை இந்த அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளன.
காலை மணி 8 தொடங்கி நண்பகல் மணி 12.30 இந்த முகப்புகள் திறக்கப்படும்.
நகர உருமாற்று மையம், UTC-இல் செயல்படும் அனைத்து அலவலகங்களும் ஒவ்வொரு நாளும் இரவு மணி 7 வரை திறக்கப்பட்டிருக்கும்.
அதோடு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை மணி 5 வரை திறக்கப்பட்டிருக்கும்.
ஜோகூர், கெடா, கிளந்தான், திரெங்கானு UTC-இல் செயல்படும் அலுவலகங்கள், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை மணி 5 வரை திறக்கப்பட்டிருக்கும்.
கடப்பிதழை புதுப்பிக்க விரும்புபவர்கள், நேரடியாக JIM முகப்பிற்கோ அல்லது இணையம் வழியாகவோ அதற்கு விண்ணப்பிக்கலாம் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
வார இறுதி நாட்களில் அதற்கான விண்ணப்பத்தைச் செய்ய எண்ணம் கொண்டிருப்பவர்கள், நேரடியாக JIM முகப்பிற்குச் செல்ல ஊக்குவிக்கப்படுகின்றனர்.
அதேவேளையில், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையம் வழியாக அதற்கான விண்ணப்பத்தை மேற்கொள்ளலாம்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)