டெங்கில், 24 ஜனவரி (பெர்னாமா) -- நாட்டில் ஊழலை எதிர்க்கவும் அதனை துடைத்தொழிப்பதையும் நோக்கமாக கொண்டு பேரணியில் ஈடுபடும் எந்தவொரு தரப்பையும் அரசாங்கம் தடுக்காது.
மேலும், 'ஊழலை வெறுக்கும் மக்கள் பேரணிக்கும் போலீஸ் தரப்பு அனுமதி அளித்துள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
''அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அனுமதி வழங்கப்பட்டதாக கூறினார். அடுத்ததாக அனுமதி வழங்கப்படாத இடங்கள் மட்டுமே உள்ளன. எனக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை. நடத்துங்கள். ஊழலை எதிர்த்து செயல்படுங்கள்,'' என்றார் அவர்.
இதனிடையே, ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒரு தரப்பை மட்டும் சார்ந்திருக்காமல், நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று அன்வார் கேட்டுக் கொண்டார்.
மடானி அரசாங்கத்தின் அமைச்சர்கள் உட்பட ஊழல் விவகாரங்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட எந்தவொரு தனிநபரிடம் தமது அரசாங்கம் சமரசம் கொள்ளாது என்று அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)