பொது

27 தொடங்கி ஜனவரி 30ஆம் தேதி வரை சபா மற்றும் சரவாக்கில் தொடர் மழை பெய்யும்

24/01/2025 07:09 PM

கோலாலம்பூர், 24 ஜனவரி (பெர்னாமா) -- எதிர்வரும் ஜனவரி 27ஆம் தேதி தொடங்கி ஜனவரி 30ஆம் தேதி வரை சபா மற்றும் சரவாக் மாநிலங்களில், தொடர் மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் மெட் மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சரவாக் மாநிலத்தில் கூச்சிங், செரியன், சமரஹான், ஸ்ரீ அமன், பெடோங், சரிகாய், சிபு, முக்கா, பிந்துலு, கபிட், சாங், மிரி, சுபிஸ், பெலுரு, மற்றும் மருதி ஆகிய இடங்களில் தொடர் மழை பெய்யும் என்று மெட் மலேசியா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் வழி தெரிவித்துள்ளது.

சபா, மேற்கு கடற்கரை பகுதிகளான ரானாவ், கோத்தா பெலுட், தவாவில் லஹாட் டத்து, சண்டகனின் தெலுபிட், கினாபாத்தாங்கான், பெலுரான்மற்றும் கூடாட்டில் தொடர் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)