பொது

14 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய இறைச்சி மற்றும் உறைந்த உணவுகளைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு

24/01/2025 07:14 PM

கிள்ளான், 24 ஜனவரி (பெர்னாமா) -- சீனப் புத்தாண்டை முன்னிட்டு விநியோகிக்கும் நோக்கத்திற்காக என்று நம்பப்படும், 14 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய தவளை இறைச்சி உட்பட, இறைச்சி மற்றும் உறைந்த உணவுகளை கடத்தும் முயற்சியை அரச மலேசிய சுங்கத்துறை, JKDM முறியடித்துள்ளது.

கடந்த டிசம்பர் 9 மற்றும் 12ஆம் தேதிகளில், மேற்கு மற்றும் வடக்கு துறைமுகங்களில் உறைந்த பொருள்கள் உள்ள நான்கு கொள்கலன்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையைத் தொடர்ந்து, இந்த கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக, சிலாங்கூர் மத்திய மண்டல இரண்டாவது பிரிவின், JKDM துணை தலைமை இயக்குநர் நோர்லேலா இஸ்மாயில் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு இறக்குமதி குறித்த சுங்கத்துறையின் தடை உத்தரவு, மூன்றாவது அட்டவணை, முதலாவது பிரிவு, தகவல் 1-இன் கீழ், MAQIS வெளியிட்ட இறக்குமதி பெர்மிட்டிற்கு உட்பட்டே இறைச்சியும் உறைந்த உணவுகளும் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்பதை நோர்லேலா சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)