கலிஃபோர்னியா, 25 ஜனவரி (பெர்னாமா) -- காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட கலிஃபோர்னியா மாநிலத்திற்கு, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நேற்று அலுவல் பயணம் மேற்கொண்டார்.
காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப், அப்பகுதிகளை மறுசீரமைப்பதற்கு தமது நிர்வாகம் முழு உதவி வழங்கும் என்று தெரிவித்தார்.
காட்டுத்தீயை தேசிய அவசரநிலையாக அறிவிப்பதாகவும், தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் சீரமைப்பதை விரைவுபடுத்துவதற்கு தாம் அனுமதி வழங்குவதாகவும் அவர் கூறினார்.
"உள்ளூர் அதிகாரிகளிடம் நான் கேட்டுக்கொள்கிறேன், ஏனென்றால் நாங்கள் கிட்டத்தட்ட அனைத்து மத்திய அனுமதிகளையும் தள்ளுபடி செய்யப் போகிறோம். நாங்கள் உங்களை மிக விரைவாகச் செயல்பட வைக்கப் போகிறோம், ஏனென்றால் மத்திய அரசின் அனுமதி பத்து ஆண்டுகள் ஆகலாம். நாங்கள் அதைச் செய்யப் போவதில்லை. பத்து நாட்கள் எடுக்க விரும்பவில்லை. எனவே நாங்கள் இதை ஒரு தேசிய அவசரநிலையாக அறிவிக்கிறோம். அதைச் செய்வதன் மூலம், நான் உங்களுக்கு உடனடி அனுமதிகளை வழங்க முடியும்," என்றார் அவர்.
லாஸ் ஏஞ்சலஸ் மேயர் கரேன் பாஸ் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் டிரம்ப் சந்திப்பு நடத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)