பொது

கல்வி அமைச்சுடனான ஒத்துழைப்பு சபா கல்வித் துறையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்

25/01/2025 04:33 PM

கோத்தா கினாபாலு, 25 ஜனவரி (பெர்னாமா) --MA63 எனப்படும் 1963-ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தத்தின் கீழ், கல்வி அமைச்சும் சபா மாநில கல்வித் துறையும் மேற்கொண்டுள்ள ஒத்துழைப்பின் மூலம், அம்மாநில கல்வித் துறையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

இதன்வழி, நிர்வாக அம்சத்திலான பயன் மட்டுமே பெறப்படாது.

மாறாக, அம்மாநில ரீதியில் நிலவும் கல்வித் தொடர்பிலான சிக்கல்களைக் கையாள்வதில், அதன் கல்வித் துறை மிகவும் திறம்பட செயல்படவும் வாய்ப்பளிக்கும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

''முக்கியமான மாற்றங்களில் சபாவின் அம்சத்தை இணைப்பதன் வழிக் கல்வியின் தொடர்பை வலுப்படுத்துகிறது. MA63 ஒப்பந்தத்தில் எட்டப்பட்ட கூறுகளில் உள்கட்டமைப்பு மற்றும் இயற்கை பேரிடர்களின் ஒதுக்கீடும் அடங்கும்,'' என்றார் அவர்.

இன்று, சபா, கியான் கோக் இடைநிலைப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற சபா மாநில தலைமைத்துவ கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

கல்வி தொடர்பிலான விவாகாரங்கள் விரைவில் களையப்படுவதை உறுதிசெய்யும் வகையில், அம்மாநில மாணவர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் உற்சாகத்தை அளிப்பதற்காக சபா மாநிலத்தின் அம்சங்களை இணைக்கும் முயற்சி அமையும் என்று ஃபட்லினா கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)