கோலாலம்பூர், 25 ஜனவரி (பெர்னாமா) -- இன்று தொடங்கி பிப்ரவரி இரண்டாம் தேதி வரையில், 2025 சீனப் புத்தாண்டுக்கான, S-H-M-M-P எனப்படும் பெருநாட் கால அதிகபட்ச விலை திட்டத்தின் அமலாக்கத்தை, உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சு தொடர்ந்து கண்காணிக்கும்.
இத்திட்டம் ஒன்பது நாள்களுக்கு அமலில் இருக்கும் என்றும், அதன் விலைக் கட்டுப்பாட்டு பட்டியலில் 16 பொருள்கள் இடம்பெற்றிருப்பதாக அதன் துணை அமைச்சர் ஃபௌசியா சாலே தெரிவித்தார்.
''கடந்தாண்டு கட்டுப்படுத்தப்பட்ட விலையில் 11 பொருள்கள் இருந்தன. இவ்வாண்டு அது 16 பொருள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இக்காலக்கட்டத்தில் குறிப்பிட்ட சில பொருள்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால் இந்த அதிகபட்ச விலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது,'' என்றார் அவர்,
வாழ்க்கைச் செலவினம் மற்றும் பொருள்களின் விலை உயர்வைக் கையாள்வதில் அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதை மக்களுக்குத் தெரிவிக்கும் நோக்கத்துடன் இந்த கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஃபௌசியா சாலே கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)