மெல்பர்ன் , 25 ஜனவரி (பெர்னாமா) -- ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியில் இறுதி ஆட்டத்திற்கு, நடப்பு வெற்றியாளர் ஜானிக் சின்னர் தேர்வாகினார்.
ஆட்டத்தின் நடுவே ஏற்பட்ட காயத்தினால் சற்று தடுமாறினாலும், அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், அமெரிக்காவின் பென் ஷெல்டனுன் ஜானிக் சின்னர் மோதினார்.
இவ்வாட்டத்தில், 7-6, 6-2, 6-2 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று, சின்னர் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறவிருக்கும் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று தமது மூன்றாவது கிரான் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் இலக்கில், 23 வயதான சின்னர் உள்ளார்.
இறுதி ஆட்டத்தில் அவர் உலகின் இரண்டாம் நிலை விளையாட்டாளரான அலெக்சாண்டர் ஸ்வெரெவுடன் விளையாடவுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)