உலகம்

இந்தோனேசியா - இந்தியா இடையிலான உறவு மேம்படுத்தப்படும் - மோடி

26/01/2025 01:58 PM

புதுடெல்லி, 26 ஜனவரி (பெர்னாமா) --   அலுவல் பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றிருக்கும் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு நடத்தினார்.

இவர்களின் சந்திப்பு நேற்று புதுடெல்லியில் நடைபெற்றது.

இரு வழி உறவை வலுப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் இவ்விரு நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்தோனேசியா - இந்தியா இடையே பாதுகாப்பு, வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகள் குறித்து இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.

“பிரதமர் மோடி மற்றும் அவரது அரசாங்கத்திற்கும் எனக்கும் எனது அரசாங்கக் குழுவிற்கும் இடையே மிகவும் தீவிரமான, மிகவும் வெளிப்படையான கலந்துரையாடலை மேற்கொண்டோம்”, என்றார் அவர்.

அதனை தொடர்ந்து, சுகாதாரம், பாதுகாப்பு, இலக்கவியல் தொழில்நுட்பம், கடல்சார் விவகாரங்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியான ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.

கடந்த ஆண்டு அதிபராக பதவியேற்ற பிறகு, சுபியாந்தோ இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் அலுவல் பயணம் இதுவாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)