பொது

மலேசியப் பிறப்பு பத்திரத்தைப் பயன்படுத்தி மைகார்ட் பெற்ற வெளிநாட்டு பெண் கைது

27/01/2025 07:47 PM

கோலாலம்பூர், 27 ஜனவரி (பெர்னாமா) --   வியாபாரம் ஒன்றை தொடங்குவதற்காக மலேசியப் பிறப்பு பத்திரத்தைப் பயன்படுத்தி மைகார்ட் பெற்ற, வெளிநாட்டு பெண் ஒருவரை, இன்று குடிநுழைவுத் துறை கைது செய்தது.

குவாந்தானில் உள்ள குடிநுழைவு துறைக்கு, சோதனைக்காக வந்த அப்பெண் அங்கேயே கைது செய்யப்பட்டதாக, தேசியப் பதிவு துறையின் அமலாக்க பிரிவு இயக்குநர் கைரு ஃபர்ஹாட் கூறினார். 

கைது செய்யப்பட்ட 36 வயதுடைய அப்பெண், இந்தோனேசியா, மேடானைச் சேர்ந்தவர் என்று சோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக, அவர் மேலும் விவரித்தார்.    

இதனிடையே, குடிநுழைவு துறை சட்டம் செக்‌ஷன் 25-இன் கீழ் அப்பெண் மீதான குற்றம் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்றாண்டுகளுக்கு சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரிங்கிட் அபராத விதிக்கப்படலாம்.    

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)