லண்டன், 05 பிப்ரவரி (பெர்னாமா) -- உலக காற்பந்து அரங்கில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் போர்த்துகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்று தனது 40 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கடந்த 20 ஆண்டுகளாக காற்பந்து உலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கும் ரொனால்டோ தமது 40 ஆவது வயதில் மற்றொரு சாதனைக்காக வேட்கையுடன் பயணிக்கிறார்.
உலக காற்பந்து வரலாற்றில் 1000 கோல்களை அடித்த முதல் ஆட்டக்காரர் என்ற பெருமையைப் பெறுவதே ரொனால்டோவின் நோக்கமாக இருக்கிறது.
இதுவரை 923 கோல்களை அடித்திருக்கும் ரொனால்டோ, உலக கால்பந்து அரங்கில் அதிக கோல்கள் போட்ட ஆட்டக்காரராக விளங்குகிறார்.
அதில் அனைத்துலக அளவில் போர்ச்சுகலுக்காக விளையாடிய 217 ஆட்டங்களில் 135 கோல்களைப் போட்டுள்ளார்.
மென்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட், யுவென்டஸ் ஆகிய கிளப்புகளில் விளையாடியுள்ள ரொனால்டோ தற்போது சவூதி அரேபியாவில் அல் நசர் கிளப்பில் விளையாடுகிறார்.
சமூக ஊடங்கங்களில் தம்மை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையில் 100 கோடி பேரை எட்டிய முதல் நபராகவும் அவர் விளங்கிறார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)