கோலாலம்பூர், 29 ஜனவரி (பெர்னாமா) -- நடப்பு அரசாங்கத்தில் உள்ள அம்னோ பிரதிநிதிகளை ஈக்கள் என்று விமர்சித்துள்ள முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மஹாதீர் முஹ்மட் குறித்தும் அம்னோ தலைவரான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி கருத்து தெரிவித்துள்ளார்.
“நாம் அவருடைய வயதை மதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால், அவருடைய கருத்தை நான் மதிக்கவில்லை,“ என்றார் அவர்.
ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில், அம்னோ பிரதிநிதிகளை ஈக்கள் என்றும், ஜ.செ.க பிரதிநிதிகளை சிங்கம் என்றும் மஹாதீர் கடந்த செவ்வாய்க்கிழமை விமர்சனம் செய்திருந்தார்.
மஹாதீரின் அக்கூற்று அம்னோவை அவமதித்துள்ளதாகவும், அக்கட்சியின் மூத்த உறுப்பினர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)