உலகம்

ஷேக் ஹசீனா தந்தையின் இல்லம் அருங்காட்சியகமாக மாற்றியதை எதிர்த்து போராட்டம்

06/02/2025 08:38 PM

டாக்கா, 06 பிப்ரவரி (பெர்னாமா) -- வங்காளதேசத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவிற்குச் சொந்தமான, டாக்காவில் உள்ள அவரது தந்தையின் இல்லம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டதை எதிர்த்து அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சமூக ஊடகங்களில் அவர் ஆற்றவிருந்த உரையை எதிர்த்து, நேற்று நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் அவ்வீட்டின் உள்ளே நுழைந்து சேதப்படுத்தி தீ வைத்தனர்.

பாகுபாட்டிற்கு எதிரான மாணவர்கள், இயக்கம் அருங்காட்சியகத்தை நோக்கி பேரணி நடத்துவதாக அறிவித்தது.

ஷேக் ஹசீனா நேற்று மாலை சமூக ஊடகங்கள் மூலம் நாட்டின் மாணவர்களிடையே உரையாற்றுவதாக அறிவித்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தப் பேரணி அறிவிக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் வளாகத்திற்குள் நுழைந்து ஏற்கனவே எரிந்து சேதமடைந்த அருங்காட்சியகத்தை மேலும் சேதப்படுத்தினர்.

முன்னதாக கடந்தாண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடத்தப்பட்ட போராட்டங்களின்போது ஹசீனாவின் தந்தைக்குச் சொந்தமான கலைப்பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

அந்தப் போராட்டங்களினால் ஷேக் ஹசீனா தமது பிரதமர் பதவியில் இருந்து விலகி அண்டை நாடான இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்.

அதற்கு முன்பு கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அந்நாட்டில் ஆட்சி புரிந்தது.


-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)