புது டெல்லி, 01 பிப்ரவரி (பெர்னாமா) -- நாட்டின் முழுமையான வளர்ச்சியை நோக்கிய தொலைநோக்குப் பார்வையுடைய இந்தியாவின் முதல் வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரைப் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடருக்கு முன்னதாக புது டெல்லி நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வருகை புரிந்த மோடி செய்தியாளர்களிடம் பேசினார்.
''எனது மூன்றாவது பதவிக்காலத்தில், இந்தியா புவியியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், நிதி ரீதியாகவும் முன்னேறி, முழுமையான வளர்ச்சியை அடைய உதவும் ஒரு நோக்கத்துடன் நாங்கள் பணியாற்றுவோம். ஒவ்வொரு பெண்ணுக்கும் கண்ணியமான வாழ்க்கையையும் சம உரிமைகளையும் வழங்குவதற்காக வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரின் போது பல முக்கியமான முடிவுகளை எடுப்போம். நாங்கள் சீர்திருத்தம் செய்வோம், செயல்படுத்துவோம், மாற்றுவோம்'', என்றார் அவர்.
ஏப்ரல் முதலாம் தேதி தொடங்கும் அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.3 விழுக்காட்டில் இருந்து 6.8 விழுக்காடு வரை வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், இந்த ஆண்டு வளர்ச்சி நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறையும் நிலையில், பொருளாதார நிலையும் மந்தமாகவே இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த அறிக்கை காட்டுகிறது.
இந்நிலையில், விலை ஏற்றம் மற்றும் மந்தமான ஊதிய வளர்ச்சி ஆகியவை செலவின சக்தியைக் குறைத்துள்ளதற்கு மத்தியில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவிற்கு மிகப்பெரிய கொள்கை ஊக்குவிப்பை அளிக்க மோடி தயாராகி வருகிறார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)