அல் நாசர், 04 பிப்ரவரி (பெர்னாமா) -- சாதனைக்கு வயது ஒரு தடையல்ல என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் அல் நாசர் 4-0 என்ற கோல் கணக்கில் அல் வாஸ்லை தோற்கடித்தது.
அதில் இரண்டு கோல்களை அடித்து அரங்கின் கைத்தட்டல்களை அள்ளினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
நாளை தமது 40 வயதை எட்டவிருக்கும் ரொனால்டோவுக்கு இது ஒரு இனிமையான தருணமாக மாறியது.
அல்-அவ்வல் அரங்கில் நடந்த ஆட்டத்தின் 25 வது நிமிடத்தில் அக்கிளப்பின் முதல் கோல் போடப்பட்டது.
சொந்த அரங்கில் விளையாடியதால், தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை ரொனால்டோ வெளிப்படுத்தினார்.
அதன் பலனாக 44 மற்றும் 78-வது நிமிடங்களில் ரொனால்டோ மேலும் இரண்டு கோல்களை அடித்து 3-0 என்ற நிலையில் வைத்தார்.
ரொனால்டோவின் இரண்டு கோல்களுடன் சேர்த்து, மொத்தாமாக அவர் 923 கோல்களை அடித்துள்ளார்.
இந்த வெற்றியின் வழிஅல் நாசர் 16 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாம் நிலையில் உள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)