கோலாலம்பூர், 06 பிப்ரவரி (பெர்னாமா) -- மலேசிய சூப்பர் லீக் கிண்ணத்தை 11-வது முறையாக கைப்பற்றுவதற்கு ஜோகூரின் ஜேடிதிக்கு இன்னும் ஓர் ஆட்டம் மட்டுமே தேவைப்படுகிறது.
நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில், 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் அது, அரச மலேசிய போலீஸ் படை பிடிஆர்எம் FC-யை வீழ்த்தி, தனது இலக்கை நெருங்கியுள்ளது.
2024 பருவத்தின் ஐந்து ஆட்டங்கள் எஞ்சி இருக்கும் வேளையில், வெற்றியாளராக உருவெடுக்க ஜேடிதிக்கு இன்னும் ஒரே ஓர் ஆட்டம் உள்ளது.
இம்மாத இறுதியில், பேராக் FC-க்கு எதிரான ஆட்டத்தில் ஜேடிதி வெற்றிப் பெற்றால் அக்கிண்ணம் அக்கிளப்பிற்கு உறுதியாகிவிடும்.
இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில், 14-வது நிமிடத்தில் கோல் அடிக்கத் தொடங்கிய ஜேடிதி அதன் கோல் வேட்டையைத் தொடர்ந்து மேற்கொண்டது.
முதல் பாதியில் இரு கோல்கள் போடப்பட்ட வேளையில், அதே உத்வேகத்துடன் அது இரண்டாம் பாதியில் களமிறங்கியது.
அதில், 54 மற்றும் 81-வது நிமிடங்களில் ஜேடிதியின் இரு கோல்கள் அடிக்கப்பட்டன.
இந்த வெற்றியுடன் அது லீக் பட்டியலில், 55 புள்ளிகளோடு உச்சத்தில் இருக்கின்றது.
அதனை அடுத்து சிலாங்கூரும், பிடிஆர்எம் FC-யும் அடுத்தடுத்து இடங்களில் உள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)