லண்டன், 07 பிப்ரவரி (பெர்னாமா) -- கரபோவ் கிண்ண காற்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு நடப்பு வெற்றியாளரனான லிவர்பூல் தகுதி பெற்றுள்ளது.
இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில், நியூகேஸ்டல் யுனைடெட்டை 4-0 என்ற நிலையில் தோற்கடித்த லிவர்பூல், 4-1 எனும் மொத்த கோல்கள் எண்ணிக்கையில் இறுதி ஆட்டத்திற்கு தேர்வாகியது.
முதல் பாதி ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் லிவர்பூல் முதல் கோலை அடித்து தனது கோல் வேட்டையை ஆரம்பித்தது.
ஆட்டத்தை சமப்படுத்த நியூகேஸ்டல் முயற்சித்தாலும், 51-வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்து லிவர்பூல் முன்னிலை வகிக்க தொடங்கியது.
அதன் பின்னர் மேலும் இரு கோல்களை அடித்து, இறுதி ஆட்டத்திற்கான நுழைவுச் சீட்டை லிவர்பூல் உறுதி செய்துக் கொண்டது.
இதன் வழி, 15-வது முறையாக லிவர்பூல் கரபோவ் கிண்ண இறுதி ஆட்டத்திற்கு தேர்வாகியுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)