உலகம்

பாகிஸ்தானின் 5 நாள் கடற்படைப் பயிற்சி; 60-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்பு 

08/02/2025 05:54 PM

பாகிஸ்தான், 08 பிப்ரவரி (பெர்னாமா) - பாகிஸ்தான் ஏற்பாடு செய்த ஐந்து நாள் கடற்படைப் பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதில் 60-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன.

அமைதிக்காக நாடுகளை ஒண்றிணைப்பதே பாகிஸ்தானின் நோக்கம் என்று தொடக்க விழாவின் போது அந்நாட்டு கடற்படைத் தளபதி ரியார் அட்மிரல் அப்துல் முனிப் தெரிவித்தார்.

கடல்சார் பாதுகாப்பை சார்ந்து உலக வர்த்தகம் செயல்படுகின்ற நிலையில், இம்முயற்சியின் நோக்கமாக கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தப் பயிற்சியின் ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் இதர நாடுகளும் பங்கேற்கின்றன.

இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், பங்கேற்கும் நாடுகளின் கொடிகளும் ஏற்றப்பட்டன. 

கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கி இப்பயிற்சிகளை பாகிஸ்தான் ஏற்று நடத்தி வருகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)