கோலாலம்பூர், டிசம்பர் 30 (பெர்னாமா) -- பெர்லிஸ் மந்திரி புசார் டத்தோ அபு பக்கர் ஹம்சா அமைக்கவிருக்கும் புதிய ஆட்சிக்குழு மன்றத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று பாஸ் கட்சி முடிவெ செய்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, முன்னாள் மந்திரி புசார் முஹமட் சுக்ரி ரம்லியின் பதவி விலகலுக்கு இணங்க ஒற்றுமையின் அடையாளமாகத் தற்போதுள்ள அனைத்து பாஸ் கட்சியின் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் தங்கள் பதவிகளில் இருந்து விலகுவதாகவும் பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் இன்று அறிவித்துள்ளார்.
பெர்லிஸ் மாநில அரசாங்கம் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் தொடர்பான அண்மைய நிலவரத்தை மத்திய பாஸ் தலைமைத்துவம் ஆய்வு செய்து பரிசீலித்த பின்னரே அம்முடிவு எடுக்கப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் தெரிவித்தார்.
அதோடு, மாநிலத் தேர்தல் மற்றும் 16வது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கும் கூட்டணியை வலுப்படுத்துவதற்கும் பெரிக்காத்தான் நேஷனலை வழிநடத்த பாஸ் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)