புத்ராஜெயா, 11 பிப்ரவரி (பெர்னாமா) -- வர்த்தகம், தற்காப்பு, தொழில்நுட்பம் மற்றும் கல்வி ஆகியவற்றில் வியூக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மலேசியாவும் துருக்கியும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
இருதரப்பு வர்த்தகத்தை நிலையான மற்றும் சமமான முறையில் ஆயிரம் கோடி அமெரிக்க டாலராக அதிகரிப்பதை அவ்விரு நாடுகளும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக துருக்கி அதிபர், ரிசெப் தயிப் எர்டோகன் தெரிவித்தார்.
இன்று, ஶ்ரீ பெர்டானாவில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இணைந்து நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் அதனைக் கூறினார்.
ஆசியாவில் துருக்கியின் மிகப் பெரிய வர்த்தக பங்காளியாக மலேசியா உள்ளது.
முன்னதாக, பெர்டானா புத்ராவில், அன்வாரும் எர்டோகனும் நேரில் சந்தித்தனர்.
அதிகாரப்பூர்வ வரவேற்பு விழாவிற்குப் பின்னர் தொடங்கிய அவ்விருவரின் சந்திப்பு, சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
அதனைத் தொடர்ந்து, இருதரப்பு சந்திப்புக் கூட்டத்தில் இருவரும் பங்கேற்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)