Ad Banner
Ad Banner
 பொது

தேசியக் கொள்கைக்கு இணங்கக்கூடிய விதிகளை மலேசியா உறுதியாகப் பாதுகாக்கும் 

05/08/2025 05:31 PM

ஜாலான் பார்லிமன், 05 ஆகஸ்ட் (பெர்னாமா) -- அமெரிக்காவுடனான வர்த்தக வரி பேச்சுவார்த்தைகளில் தேசியக் கொள்கையுடன் இணங்கக்கூடிய பல விதிகளை உறுதியாகப் பாதுகாக்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும்.

பேச்சுவார்த்தைகளின் போது, பூமிபுத்ரா கொள்கை உட்பட பல நாடுகளால் இணக்கம் தெரிவிக்கப்பட்ட சில அமெரிக்க கோரிக்கைகளுக்கு மலேசியா அடிபணியவில்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

''நமது தேசியக் கொள்கையுடன் ஒத்துப்போகும் சில விதிகளைப் பாதுகாப்பதில் மலேசியா மிகவும் கடுமையாக உள்ளது. எடுத்துக்காட்டாக, பூமிபுத்ரா கொள்கை மிக முக்கியமானதாக உள்ளது. இது பாரபட்சமானதாக கருதப்படுகிறது. அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அது அனைத்துலக வர்த்தகத்தின் உணர்வுக்கு எதிரானது. இருந்தபோதிலும் நம்மால் முடியாது, மலேசியா பூமிபுத்ரா கொள்கையை பாதுகாக்க வேண்டும் என்பதோடு இறுதியில், அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது,'' என்றார் அவர். 

ஏற்றுமதி - இறக்குமதி கொள்கைகள் போன்ற நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளுக்கு அரசாங்கம் அமெரிக்காவிடம் மட்டுமல்ல சீனா உள்ளிட்ட பிற நாடுகளிடமும் சகிப்புத்தன்மையுடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]