பொது

மலேசியா-துருக்கி: பல்வேறு வியூக துறைகளில் 11 ஒத்துழைப்பு ஆவணங்கள்

11/02/2025 06:06 PM

புத்ராஜெயா, 11 பிப்ரவரி (பெர்னாமா) --  பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் துருக்கி அதிபர் ரிசெப் தயிப் எர்டோகன் முன்னிலையில் இன்று பல்வேறு வியூக துறைகளில் 11 ஒத்துழைப்பு ஆவணங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

ஆற்றல் மாற்றம், பேரிடர் நிர்வகிப்பு, அரசதந்திர பயிற்சி, துருவ ஆராய்ச்சி, தற்காப்பு, தொடர்பு செயல்முறை, விவேக நகரம், வர்த்தகம் மற்றும் பயனீடு போன்ற முக்கிய துறைகள் அந்த ஒத்துழைப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளன.

செய்தி பரிமாற்றம், செய்தி தயாரிப்பு மற்றும் ஊடகம் தொடர்பான செயல்பாடுகளின் பரிமாற்றத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் புதுப்பிக்கவும்,
மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமா-வும் அனாடொலு நிறுவனமும்
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

பெர்னாமா தலைமை செயல்முறை அதிகாரி, டத்தின் படுக்கா நுரூல் அஃபிடா கமாலுடின் மற்றும் அனாடொலு நிறுவனத்தின் தலைவரும் தலைமை செயல்முறை அதிகாரியுமான செர்டார் கரகோஸ் ஆகியோர் அந்த ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)