விளையாட்டு

கட்டார் டென்னிஸ் இரண்டாம் சுற்றில் கார்லோர் அல்கராஸ்

18/02/2025 08:36 PM

டோஹா, 18 பிப்ரவரி (பெர்னாமா) -- கட்டார் டென்னிஸ் போட்டியின் இரண்டாம் சுற்றுக்கு ஸ்பெயினின் கார்லோர் அல்கராஸ் முன்னேறினார். 

இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் அவர் குரோஷியாவின் மெரின் சிலிக்கைத் தோற்கடித்தார். 

டோஹாவில் ஸ்குவாஷ் வளாகத்தில் நடந்த இப்போட்டியில், அல்கராஸ் மற்றும் சிலிக் இடையேயான போட்டி கடுமையாக இருந்தது. 

ஆயினும்  6-4, 6-4 எனும் நேரடி செட்களில் அல்கராஸ் ஆட்டத்தை வெற்றிக்கொண்டர். 

இந்த ஆட்டம் 1 மணி 36 நிமிடங்களில் நிறைவடைந்தது. 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)