கோலாலம்பூர், 19 பிப்ரவரி (பெர்னாமா) -- மக்களவை அமர்வின்போது, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், தேச நிந்தனை கூறுகளை தவிர்த்து, இன ஒற்றுமையை வளர்க்கும் மற்றும் தேசிய அரசை கட்டியெழுப்பும் விவாதங்களை மேற்கொள்ள நினைவூட்டப்படுகிறார்கள்.
மேலும், அண்மையில் தொடங்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மாட்சிமை தங்கிய மாமன்னரின் ஆணையை அவர்கள் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
ல்நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் விவேகமுடையவர்களாக இருக்க வேண்டும். அதைவிடுத்து உணர்வுகளைத் தூண்டிவிட்டு இத்தகைய விசயங்களை வளர்ப்பதற்கு முயற்சிக்கக்கூடாது,'' என்றார் அவர்.
இனப் பாகுபாடு தடுப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் கூறியது தொடர்பில், இன்று மக்களவையில், பெங்காலான் செபா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அஹ்மாட் மர்சூக் ஷாரி எழுப்பிய கேள்விக்கு ஃபஹ்மி அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)