தென் கொரியா, 06 மார்ச் (பெர்னாமா) -- பொஷியனில் இராணுவப் பயிற்சியின் போது, விமானப்படை ஜெட் விமானம் வீசிய வெடிகுண்டுகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்ததில் எண்மர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தில் வீடுகளும் ஒரு தேவாலயமும் சேதமடைந்ததாக விமானப்படையும் தீயணைப்புப் படையின் அதிகாரி ஒருவரும் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த எண்மரில் இருவர் படுகாயமடைந்ததாக கியோங்கி-டோ புக்பு தீயணைப்பு சேவையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போச்சியோன், சியோலில் இருந்து வட கிழக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில், வட கொரியாவுடனான பெரிதும் இராணுவமயமாக்கப்பட்ட எல்லைக்கு அருகில் உள்ளது.
இச்சம்பவத்திற்கு தென் கொரியாவின் விமானப்படை மன்னிப்பு கோரியுள்ளது.
பயிற்சி மைதானங்களால் ஏற்படும் இடையூறு மற்றும் ஆபத்து குறித்து அப்பகுதியில் வசிப்பவர்கள் பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)