விளையாட்டு

ஒர்லியன்ஸ்: சீ ஜியா முதல் சுற்றில் வெற்றி

06/03/2025 07:59 PM

பாரிஸ், 06 மார்ச் (பெர்னாமா) -- ஒர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பொது பூப்பந்து போட்டி.

நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் கணித்தது போலவே நாட்டின் தேசிய ஒற்றையர் பூப்பந்து ஆட்டக்காரர் லீ சீ ஜியா வெற்றி பெற்றார்.

தைவானின் சீ யூ ஜென்னை தோற்கடித்து அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Palais des Sports பூப்பந்து அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் சீ ஜியா இந்த பருவத்தின் முதல் போட்டியில் களமிறங்கினார்.

அதில், 17-21, 21-17, 21-17 என்ற நிலையில், அவர் வெற்றி பெற்றாலும், அதற்கு அவர் மிகவும் கடினமாக போராடிய கட்டாயம் ஏற்பட்டது.

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வெற்றியாளரான சீ ஜியா நாளைய ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பியை சந்திக்க உள்ளார்.

இதனிடையே, ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் மலேசியா தோல்வி அடைந்தது.

ஏரன் சியா - சோ வூய் யிக் ஜோடி, சீனாவின் சன் வென் ஜூன் - சூ யீ ஜூன் இணையரிடம் 18-21, 8-21 என்ற நேரடி செட்களில் வீழ்ந்தது.

மான் வெய் சொங் - டீ காய் வுன் ஜோடியும் 16-21, 14-21 எனும் நேரடி செட்களில் தென் கொரியா போட்டியாளர்களிடம் தோல்வி கண்டனர்.

மற்றொரு நிலவரத்தில், மகளிருக்கான இரட்டையர் பிரிவில் பெர்லி தான் - எம்.தீனா இணை வெற்றிகரமாக அடுத்த சுற்றில் கால் வைத்தது.

அவர்கள் தைவானின் நிகோல் கொன்சலெஸ் சான் - லின் சீ சுன் ஜோடியை 25-23, 21-8 என்று நேரடி செட்களில் தோற்கடித்தனர்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6.30 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]