கோலாலம்பூர், 10 மார்ச் (பெர்னாமா) -- சாதாரண நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் அடிப்படை மருந்துகளின், மருந்துச் சீட்டுகளை, நோயாளிகளுக்கு வழங்குவதற்கு, மருத்துவ உதவி அதிகாரிகளை அனுமதிக்கும் ஒரு சிறப்பு சுற்றறிக்கையை சுகாதார அமைச்சு வெளியிடும்.
இதற்கு,1952 ஆம் ஆண்டு நச்சு சட்டத்தில் திருத்தங்கள் தேவையில்லை என்றும், அதற்குப் பதிலாக சுகாதார இயக்குநரின் அதிகாரம் போதுமானது என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், மருத்துவ உதவி அதிகாரிகளுக்கு மட்டுமே மருந்துச் சீட்டுகளை வழங்க அனுமதி உள்ளதாகவும், அதிலும், காய்ச்சல், இருமல், சளி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற சில சாதாரண மருந்துகளுக்கு மட்டுமே அந்த அனுமதி உண்டு என டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெளிவுப்படுத்தினார்.
இதனிடையே, தனியார் மருத்துவமனைகள் காப்பீடு கொண்டிருக்கும் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.
தரவுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து விரிவாக மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் கூறினார்.
எனவே, இது தொடர்பில் ஊகங்களையும் வதந்திகளையும் வெளியிட வேண்டாம் என சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)