Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

குற்றச் செயல்களின் சவால்களை எதிர்கொள்ள ஊடகங்களின் பங்கு அவசியம்

14/03/2026 01:36 PM

கோலாலம்பூர், 14 மார்ச் (பெர்னாமா) - நாட்டில் சிக்கலாக மாறிக் கொண்டிருக்கும் குற்றச் செயல்களின் சவால்களை எதிர்கொள்ள, அதிகார தரப்பினருக்கு உதவுவதில் ஊடகங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது.

குற்றச்செயல்கள் இன்று இலக்கவியல் வடிவத்திற்கு மாறி வருதோடு, அவை உள்ளூரையும் எல்லைகளையும் கடந்து வருகின்றன.

மேலும், சிறிய அளவில் தொடங்கி திட்டமிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதால், சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கும் ஊடகங்களும் இடையிலான ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் கூறினார். 

''இந்தச் சூழலில், பொதுமக்களுக்குத் தகவல்களைத் தெரிவிப்பதில் மட்டுமல்லாமல், பொதுமக்களின் கருத்தை வடிவமைப்பதிலும், அமலாக்க நிறுவனங்கள், குறிப்பாகக் குற்றப் புலனாய்வுத் துறை மீது பொதுமக்களின் நம்பிக்கையின் அளவை அதிகரிப்பதிலும் ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன'' என்றார் அவர். 

நேற்றிரவு, கோலாலம்பூர் புக்கிட் அமானில், குற்றப் புலனாய்வுத் துறை ஏற்பாடு செய்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் டத்தோ எம். குமார் அதனைத் தெரிவித்தார்.

குற்றவியல் தொடர்பான செய்திகளை வெளியிடும் போது ஊடகம் கவனமாக இருப்பதோடு அது பொதுமக்களின் நலனுக்கும், விசாரணை செயல்முறைக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இல்லையேல், அது நீதி நடைமுறைக்கும் மக்களின் பாதுகாப்பிற்கும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று குமார் நினைவூட்டினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)