கோலாலம்பூர், 13 மார்ச் (பெர்னாமா) - வரும் ஏப்ரல் முதலாம் தேதி தொடங்கி கோலாலம்பூர், பினாங்கு, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களிலுள்ள கடைகளில் பொது வெளியில் சிகரெட்டுகளைக் காட்சிப்படுத்த தடை செய்யப்படும் என்று கோலாலம்பூர் மேயர் டத்தோஸ்ரீ மைமுனா முஹம்மத் ஷெரீப் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு பொது சுகாதாரத்திற்கான புகைபிடிக்கும் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் அனைத்து வணிகர்களும் இதற்கு இணங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சிகரெட்டுகள் மற்றும் மற்ற புகைபிடிக்கும் பொருட்கள் மூடிய அலமாரிகளில் பொது மக்களின் கண்களுக்குத் தெரியாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சில்லறை விற்பனைக் கடைகளில் புகையிலை மற்றும் மின்னியல் சிகரெட் பொருட்களைக் காட்சிப்படுத்துவதும் தடை செய்யப்பட்டது.
தடையை மீறும் தனிநபர்களுக்கு 500 முதல் 30,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அதே நேரத்தில் கடையின் உரிமையாளருக்கு மூன்று லட்சம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)