Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

நான்கு மதிப்புமிக்க கிண்ணங்களை  வென்ற சாதனையில் செல்சி

29/05/2025 06:46 PM

இங்கிலாந்து, 29 மே (பெர்னாமா) - UEFA Konferens கிண்ணத்தை இங்கிலாந்தின் செல்சி கைப்பற்றியது

இன்று அதிகாலை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் செல்சி 4-1 என்ற கோல் எண்ணிக்கையில் ஸ்பெயினின் Real Betis-சை வீழ்த்தியுள்ளது. 

இதன்வழி, ஐரோப்பிய நிலையில் உள்ள நான்கு மதிப்புமிக்க கிண்ணங்களயும் வென்ற முதல் அணி என்ற பெருமையையும் செல்சி பெற்றுள்ளது. 

ஆட்டம் தொடங்கிய 9-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து  Real Betis செல்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

முதல்பாதி  ஆட்டம் வரை இதே நிலை நீடித்ததால், 1-0 என்ற நிலையில் Real Betis முன்னிலை வகித்தது. 

ஆனால், இரண்டம் பாதி ஆட்டத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கிய செல்சி 65-வது நிமிடத்தில் இருந்து வரிசையாக கோல்களைப் போட்டு வெற்றிப் பெற்றது. 

அதன் முதன்  கோலை Enzo Fernandez அடித்த வேளையில், எஞ்சிய இரு கோல்களை
Nicolas Jackson போட்டார்.  

இதன் மூலம் செல்சி, வெற்றியாளர் லீக், யூரோப்பா லீக், கான்பரன்ஸ் லீக் மற்றும் கிளப் வெற்றியாளர் கிண்ணங்களை வென்ற முதல் அணியாக உருவெடுத்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)