Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

பிரான்ஸ் பொது டென்னிஸ் பட்டத்தை வென்றார் கோகோ காஃப்

08/06/2025 06:45 PM

பாரிஸ், 08 ஜூன் (பெர்னாமா) -- உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் அரினா சபாலென்காவைத் தோற்கடித்து பிரான்ஸ் பொது டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றினார் அமெரிக்காவின் கோகோ காஃப்.

2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரான்ஸ் பட்டத்தை வென்ற முதல் அமெரிக்க வீராங்கனை என்ற பெருமையை கோகோ காஃப் பெற்றிருக்கின்றார். 

நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 6-7 என்று முதல் செட்டை வென்ற அரினா சபலென்கா, அடுத்த இரு செட்களில் தோல்வி கண்டார். 

கடுமையான போட்டிக்குப் பிறகு  இரண்டு மணி நேரம் 38 நிமிடங்களில் 6-2, 6-4 என்று இரு செட்களையும் வென்று  21 வயதுடைய கோகோ காஃப் ஆட்ட நாயகியானார். 

உலகத்தர வரிசையில், இரண்டாம் இடத்தில் இருக்கும் அவர், 2023 ஆம் ஆண்டு அமெரிக்க பொது டென்னிஸ் பட்டத்தை வென்றிருந்தார். 

வெற்றி பெற்றதை அடுத்து, பாரிஸில் உள்ள தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அவர் சபாலென்காவை தோற்கடித்தது கடினமான ஒரு சவால் எனவும் கூறியுள்ளார். 

2002 ஆம் ஆண்டு பிரான்ஸ் பட்டத்தை வென்ற செரினா வில்லியம்ஸ்சுக்கு பிறகு, அப்பட்டத்தை வென்ற இளைய அமெரிக்கர் என்ற அங்கீகாரத்தையும் அவர் பெறுகின்றார். 


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)