டமாகஸ், 23 ஜூன் (பெர்னாமா) - சிரியா, டமாஸ்கஸின் Dweila பகுதியில் உள்ள Mar Elias தேவாலயத்தில் நேற்று நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில், குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தில், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக சிரியாவின் சுகாதார அதிகாரிகளும் பாதுகாப்பு வட்டாரங்களும் தெரிவித்தன.
கடந்த டிசம்பர் மாதம் இஸ்லாமியவாத தலைமையிலான கிளர்ச்சியாளர்களால் பஷார் அல்-அசாத் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் டமாஸ்கஸில் நடந்த முதல் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் இதுவாகும்.
தற்கொலை செய்து கொண்ட நபர், இஸ்லாமிய அரசின் உறுப்பினர் என்று சிரியாவின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
தேவாலயத்திற்குள் நுழைந்து, துப்பாக்கிச் சூடு நடத்தியப் பின்னர், தம்மிடம் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து அந்நபர் தற்கொலை செய்துகொண்டதாக அவ்வமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இத்தாக்குதலில் இருவர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
தேவாலயத்தில், நேற்று திடீரென இருவர் பேர் வெடிகுண்டு பொருட்களுடன் அங்கு வந்து நுழைந்து அதனை வெடிக்கச் செய்வதற்கு முன்னர், சபைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக தேவாலயத்தில் உள்ள ஒரு பாதிரியார் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)